என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மகள் மாயம்"
கபிஸ்தலம்:
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள உம்பளப்பாடி தெற்குத் தெருவில் வசிப்பவர் செல்வமணி (வயது 50) சமையல் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அமுதா. இவர்களது மகள் தேவிகா (18). கும்பகோணம் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் கடந்த 4-ந் தேதி கல்லூரிக்கு சென்ற தேவிகா அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதை அறிந்த அவரது தந்தை செல்வமணி உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மகளை தேடி பார்த்தார். ஆனால் தேவிகாவை காணாததால் செல்வமணி மனமுடைந்தார்.
இதையடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு வைத்திருந்த விஷ பூச்சி மருந்தை சாப்பிட்டு செல்வமணி மயங்கி விட்டார். மயங்கிய நிலையில் இருந்த செல்வமணியை உடனடியாக சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த செல்வமணி பலனின்றி பரிதாபமாக இறந்தார் .
இது குறித்து அவரது மனைவி அமுதா கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்- இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.